29.2 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

குஜராத்திடம் இருந்து சென்னை அணிக்கு காத்திருக்கும் சவால்!!


நந்தா நாகராஜன்,

கட்டுரையாளர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில், அது கடந்து வந்த பாதை குறித்த சில சுவாரஷ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

”சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பான்” என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல, 1 லட்சத்து பத்தாயிரம் பேர் கூடியிருந்த அந்த பிரம்மாண்ட அரங்கத்தில், 4 அரை கோடி ரசிகர்களின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, மஞ்சள் படையை வழிநடத்த வீர் நடை போட்டார் மகேந்திர சிங் தோனி. ஆம் அந்த களம், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போடியான, சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய களம் தான்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீழ்ச்சியின் காரணாமாக அந்த அணியின் மீது வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்களுக்கு, இந்த ஆண்டு மினி ஆக்ஸன் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்து விட்டது. பென் ஸ்டோக்ஸ், டெவன் காண்வே மற்றும் அஜிங்கிய ரஹானேவின் வருகை… இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வென்று விடலாம் என்ற எனும் நம்பிக்கையை கூட்டியது.

குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் சி எஸ் கே வின் ராக்கெட் ராஜாவான ருதுராஜ் கெய்க்வாட்டின் ருத்ரதாண்டவம் எதிர் அணிகளின் பவுளிங் ஸ்குவார்டுகளுக்கு அன்றே ஒரு எச்சரிக்கை அலாரத்தை ஒளிக்கச் செய்திருக்கும்… ஆனால் களம் கண்ட முதல் போட்டியின் முடிவானது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோல்வியியை பரிசாக கொடுத்தது.

ஆனால் அதற்கு அடுத்தடுத்த போட்டிகளில் சென்னை அணியின் பேட்டிங் திறனை சமாளிக்க திக்கு முக்காடிய அணிகளை இங்கு பெயர் சொல்லி தான் அறிய வேண்டும் என்பதில்லை… மஞ்சள் படை செல்லும் இடமெல்லாம் எப்பேற்பட்ட நகரங்களும் திக்கு முக்காடிப் போயின. குஜராத்தில் தோல்வியுற்ற சென்னை அணியை ஆறத்தழுவி வரவேற்ற சென்னை ரசிகர்கள், 3 வருடங்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளை சொந்த மண்ணில் பார்க்க ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர்.

ருதுராஜுடன் கைகோர்த்த டெவன் காண்வே பவர்பிளே ஓவர்களை தெரிக்கவிட்டு, சென்னையில் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலேயே, அதிகபட்ச பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்தது மட்டுமல்லாமல், லக்னோ அணிக்கு இலக்காக 217 ரன்களை நிர்னயித்தது. தனது இரண்டாவது வெற்றிக்கான தேடலில் இறங்கிய லக்னோவுக்கு சவாலாக இருந்த மொயின் அலி, 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, அந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

அதே கொதிப்புடன் மும்பை விஜயம் செய்த சென்னை அணி வான்கடே மைதானத்திலேயே, பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் விதியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. வெற்றி முகத்தில் சென்னைக்கு திரும்பிய சூப்பர் கிங்ஸ்சுக்கு, சஞ்சு சாம்சனின் சைலெண்ட் கில்லர் ஒரு சர்ப்ரைஸ் தோல்வியை கொடுத்தது மட்டுமல்லாமல், நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சகாரின் தொடர் காயங்கள் சிறிய அலசலை ஏற்படுத்தியது.. இருப்பினும் பேட்டிங் யூனிட்டின் நம்பிக்கையை மையமாக வைத்துக்கொண்டு, கிங் கோலியின் ராஜாங்கமான பெங்களூருக்கு புறப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்..

ஈ சாலா கப் நமதே என்ற படி ஒவ்வொரு முறையும் கோப்பைக்கான கனாவுடன் விளையாடி வரும் பெங்களூரு அணிக்கு அன்றைய தினம் பிரளயம் காணப்போகிறோம் என்பதை உணராது இருந்த நிலையில், சின்னசாமி மைதானத்தின் நாலா பக்கங்களையும் பவுண்டரிகளால் பதம் பார்த்தது டெவன் காண்வே, அஜிங்கிய ரஹானே, ஷிவம் தூபே கூட்டணி.

இருந்தாலும் கடைசி ஓவர் வரை கியூரியாசிட்டிக்கு பஞ்சமில்லாமல் வைத்திருந்த மேக்ஸ்வெல், டூ பிளசி ஜோடி ஒரு கட்டத்தில் தோல்வியின் பிடியில் மாட்ட, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதே வெற்றி முகத்துடன் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா சென்ற மஞ்சள் படை முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் குவித்து இந்த ஐபிஎல் தொடரிலேயே ஒரு அணியின் அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது. அந்த வெற்றிக்கு பின்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்த தோனி அண்ட் கோ, சொந்த மண்ணில் மீண்டும் பஞ்சாப் அணியுடன் தோல்வியை சந்தித்தது.

ஸ்டார் பவுளர்கள் ரூல்ட் அவுட் ஆனதை அடுத்து, அணியில் இளம் வீரர்களான துஷார் டேஸ்பாண்டே, மதீஷா பத்திரானா என வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பை வலுப்படுத்தும் போட்டியாக பார்க்கப்பட்ட லக்னோ அணியுடனான ஆட்டம் மழையால் ரத்தானது…. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதை அடுத்து, முக்கிய போட்டியாக பார்க்கபட்ட மற்றொரு சுவாரஸ்யத்தை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் 40000 ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பே அது… ஆம் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை மீண்டும் ஒருமுறை சந்தித்த சிஎஸ்கே, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், 13 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் மும்பையை வென்று அனைத்தயும் உடைத்து தவிடு பொடியாக்கியது.

அடுத்ததாக டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணிக்கு காத்திருந்தது செக் மேட். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் ரேசில் குஜராத், லக்னோ, ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப் மற்றும் மும்பை என அனைவருக்கும் முதல் நான்கு இடங்களுக்கான வாய்ப்பு இருந்ததால், சென்னை சந்திக்க இருந்த கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்த நிலையில் தான் ஈடன் கார்டன் மைதானத்தில் கண்ட தோல்வியை மறந்து, கொல்கத்தா அணியை சொந்த மண்ணில் படை பலத்துடன் வீழ்த்தி விடலாம் என்ற என்னத்துடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு அதிர்ச்சியளித்த கொல்கத்தா, சென்னையின் இறுதி போட்டியை வாழ்வா சாவா போட்டியாக மாற்றியது.

இறுதி லீக் ஆட்டத்தில் நிச்சயம் வென்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும்… ஆனால் தோனியின் என்னமோ அது அல்ல. அதீத சாத்தியமான பேட்டிங் திறனை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடர் முழுவதுமாகவே நல்ல ரன் ரேட்டில் தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், ரன் ரேட் அடிப்படியில், புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்க சாத்தியமான வாய்ப்பு இருந்தது.. அதனை கருத்தில் கொண்ட மகேந்திர சிங் தோனி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

பெரிய டார்கெட்டை மையமாக வைத்து பேட்டிங்கிள் களமிறங்கிய ருதுராஜ் மற்றும் காண்வே ஜோடி, அருன் ஜெட்லி மைதானத்தில் மஞ்சள் படையின் ஆதிக்கத்தை அடிக்கல் நாட்ட, இறுதியில் 223 ரன்கள் சேர்த்து, டெல்லி வெற்று பெற இமாலய இலக்கை நிர்னயித்தது. அந்த இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியோ பிரித்திவி ஷா, சால்ட் ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களின் விக்கெட்டுகளை இலக்க, மற்றொரு புறம், சென்னை அணியின் பிளே ஆப் கணவை சிதறடிக்க டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட வார்னர் அடித்து பிரித்துக்கொண்டிருந்தார்.

ஆனால் மற்றொரு புறம் டெல்லியின் நம்பிக்கை விக்கெட்டுகளை வசியப்படுத்திய தீபக் சகார், மஹீசா தீக்சனா, மற்றும் பதிரானா ஆகியோர் டெல்லியின் ஓட்டத்தை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல் ரன் ரேட் விகிதத்தில் இரண்டாம் இடம் பிடிக்கச் செய்தனர். இதனால் லக்னோவின் வெற்றியை எதிர்நோக்க அவசியமில்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசால்ட்டாக குவாலிபயர் 1 ஆவது ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொள்ள மீண்டும் சென்னைக்கு படையெடுத்துள்ளது.

போட்டியின் முடிவிற்கு பிறகு தோனியிடம் வெற்றிக்கான காரணங்கள் குறித்து கேட்ட போது கூலாக பதில் சொன்ன தோனி, அணியில் இருப்பவர்களுக்கு சரியான ரோலை கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் போது, வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கு அது வழி வகுக்கும் என பேசினார். எனவே சென்னை அணியின் இந்த 12 ஆவது பிளே ஆப் வாய்ப்பு கோப்பை வெல்லும் வரை செல்ல இன்னும் வெகு தூரம் இல்லை என்றாலும், பலம் வாய்ந்த குஜராத் அணியை எதிர்கொள்ள நிச்சயமாக தோனியிடம் தக்க திட்டம் இருக்கக் கூடும்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலேயே சென்னை வந்து விளையாடாத அணியாக குஜராத் இருந்தாலும் கூட, சென்னை விக்கெட் குஜராத் வீரர்களுக்கு அவ்வளவு சவாலானதாக இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் 70 சதவிகிதம் டாஸ் வெல்லும் அணியே சென்னையில் வெற்றி வாகை சூட வாய்ப்பு இருப்பதால் முதல் இன்னிங்ஸில் சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்த பின்னர், குஜராத் அணியை சுருட்டும் யோசனையே கேப்டன் கூலுக்கு இருக்கக் கூடும் என கணிக்கப்படுகிறது.

அதே சமையம் சென்னை அணியின் பேட்டிங்கை உடைக்க தகுந்த பவுளிங் ஸ்குவாடை வைத்திருக்கும் ஹர்திக் பாண்டியா அண்ட் கோ சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு டப் கொடுக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை… ஆக மொத்தம் சென்னை ரசிகர்களுக்கு, குவாலிபயர் 1 இல் நல்ல விருந்து காத்திருக்கிறது. 4அரை கோடி ரசிகர்களின் ஒரே கனவு, ஐபிஎல் 2023 இன் கோப்பையை மகேந்திர சிங் தோனிக்கு பெற்று கொடுத்த பின்னர், அவர் ஓய்வு அறிவித்தாலும் பரவாயில்லை என்பது தான்.

ஆனாலும் இன்னும் ஓய்வு குறித்து சிந்திக்காத மகேந்திர சிங் தோனி, சென்னை அணிக்காக தான் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கு பாஸ் எனும் முனைப்பிலேயே வீர நடை போட்டு அணியை வழிநடத்தி வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே அவரை பார்க்கும் போதெல்லாம்….. நீ சிங்கம் தான் என உணர்ச்சிப்பொங்க வைக்கிறது…

நந்தா நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading