டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஐடிஓ பகுதியில் பழைய போலீஸ் குடியிருப்புக்கு எதிரே வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறையின் வெவ்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று வருமான வரித்துறை அலுவலகம் இயங்கும் 3வது தளம் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிலர் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றனர்.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 21 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்த நிலையில் தீயை அணைக்க வெகுநேரம் ஆனாது. இதனையடுத்து தீயில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் இந்த விபத்தில் 46 வயதான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.







