முக்கியச் செய்திகள் இந்தியா வாகனம்

கார்களில் 6 ஏர்பேக்குகள்- அரசுக்கு மாருதி சுசுகி கோரிக்கை

வாகனங்களில் 6 ஏர் பேக்குளை வைக்கும் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாருதி சுசுகி இந்திய நிறுவனத்தின் தலைவர் RC பார்கவா தெரிவித்துள்ளார்.

மாருதி சுசுகி இந்திய நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாகனங்களில் 6 ஏர் பேக்குகளை வைக்க வேண்டும் என மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது கார் விற்பனையை வெகுவாக பாதிக்கும். இதனால் ஆரம்ப ரக கார்களை வாங்கும் மக்களின் சதவிகிதம் குறையும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 6 ஏர் பேக்குகள் கட்டாயம் என்பதன் மூலம் ஆரம்ப ரக கார்களின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இது ஆரம்ப ரக கார்கள் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விலைகள் அதிகரித்து வருவதால், சிறிய கார்களின் விற்பனை குறிப்பாக நாடு முழுவதும் உள்ள மெட்ரோ அல்லாத சந்தைகளில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆறு ஏர்பேக் விதிமுறைகளை அமல்படுத்தியதன் மூலம், உள்நாட்டு சிறிய கார் தொழில்துறையை மேலும் சுருங்கச் செய்யும் வகையில் விலைகள் மேலும் உயரும் என்று அவர் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கார் உற்பத்தித் துறை முக்கியமானது, ஏனெனில் இது மிகப் பெரிய வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. கார் சந்தையில் விற்கும்போது அது பல வேலைகளை உருவாக்குகிறது. டிரைவர்கள், பராமரிப்பு, பழுதுபார்ப்பு, பாகங்கள் போன்றவற்றின் மூலம் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கார் சந்தை எந்தவிதமான  முன்னேற்றத்தையும் காணவில்லை. இது வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

ஏர்பேக்குகள் சேர்ப்பதால் கார்களின் விலை எவ்வளவு உயரக்கூடும் என்று கேள்விக்கு பதிலளித்த அவர், “எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது 20,000-25,000 ரூபாய் வரம்பில் இருக்கலாம். ஆறு ஏர்பேக் விதிமுறைகளைக் கொண்டுவர இது சரியான நேரம் அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த விஷயத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என பார்கவா கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சாலைப் போக்குவரத்து அமைச்சகம், வரும் அக்டோபர் முதல் பயணிகளின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக 8 பேர் வரை பயணிக்கக்கூடிய மோட்டார் வாகனங்களில் குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளை வழங்குவதை கார் தயாரிப்பாளர்கள் கட்டாயமாக்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்தார் படேல் சிலை அமைந்த இடம் கோயிலாக மாறிவிட்டது : அமைச்சர் அமித்ஷா

Halley Karthik

போலி, மோசடி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்யும் சட்டம் அமல்

G SaravanaKumar

ரூபாய் நோட்டுகளில் தலைவர்களின் படம்: ரிசர்வ் வங்கி பதில்

Web Editor