தமிழகம் செய்திகள்

சாத்தான்குளம் அருகே கூட்டுறவு வங்கி அதிகாரியை கண்டித்து போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தொடக்க வேளாண்மை
கூட்டுறவு வங்கியில், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு காலதாமதம் செய்த
அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிலை பகுதியில்,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் விரைவில்
தேர்தல் நடைபெற உள்ளதால், அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில்
உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கைக்கு
இன்று கடைசி நாள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பு மக்களை இதுவரை
உறுப்பினராக கூட பதிவு செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதியை சேர்ந்த
நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், தட்டார்மடம் – திசையன்விளை
பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

—-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ஆளுநரை இபிஎஸ் சந்தித்ததன் உண்மையான காரணம் இதுதானா?”- அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி

Web Editor

ஆடுகள் மழையில் நனைகிறதா…. இதை ஃபாலோ பண்ணுங்க…

G SaravanaKumar

அதிமுக தேமுதிக இடையே இன்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு?

G SaravanaKumar