30.5 C
Chennai
May 14, 2024
முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள் செய்திகள் சினிமா

“Oppenheimer” திரை விமர்சனம் – படம் எப்படி இருக்கு…?


சுஷ்மா சுரேஷ்

கட்டுரையாளர்

 

நாம் வரலாற்றை புரட்டி பார்க்கும் போது, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் கோரமுகம் என்றால் அது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதல் தான். இந்த அணுகுண்டை உருவாக்க அமெரிக்கா செய்த செயல்களும் செலவுகளும் பட்டியலிட்டு செல்லலாம். இரண்டாம் உலக போர் முடிவுக்கு வர ஒரு முக்கிய காரணமாக இருந்த இந்த அணுகுண்டை தயாரித்த Oppenheimer- ஐ வரலாறு என்றும் மறக்காது…. அதற்கு உலகின் சுழற்சியையே மாற்றிய Fat Boy மற்றும் Little Boy-யே சாட்சி. இவ்வாறு உலகையே உலுக்கிய J. Robert Oppenheimer பற்றிய கதை தான் இந்த Oppenheimer திரைப்படம். இப்படத்தினை உலகெங்கும் யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

கை பேர்ட் மற்றும் மார்டின் J. ஷெர்வினும் இணைந்து எழுதிய American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் நூலை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஹாலிவுட் திரைப்படம் – ஓப்பன் ஹைமர்.  இந்த ஆண்டு, உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படமானது  IMAX வடிவத்தை ஃபார்மெட் 70 எம்.எம். பெரிய வடிவ பட ஒளிப்பதிவுடன் இணைக்கப்பட்டு முதல்முறையாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கிறிஸ்டோபர் நோலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், Cillian Murphy (as J. Robert Oppenheimer) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் சில பகுதிகள், இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஓப்பன்ஹைமரும் எயின்ஸ்டீனும் இணைந்து பணியாற்றிய இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடி – பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் Oppenheimer ஆக Peaky Blinders புகழ் Cilian Murphy நடித்துள்ளார், மேலும் Iron Man புகழ் Robert Downey Jr., General ஆக வரும் Matt Damon, Oppenheimer மனைவியாக Emily Blunt, காதலியாக Florence Plugh என ஹாலிவுட் நட்சத்திர பட்டாளமே நிறைந்துள்ளது. இவர்களது நடிப்பே படத்திற்கு பெரும் பலமாக இருந்தது.

இப்படத்தில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவை பின்னணி இசை தான். வழக்கம் போல் தனது Style-இல் படத்தின் பின்னணி இசையில், நாம் தலைக்குளே Atom Bomb வெடிக்கும் அளவிற்கு இசையை செதுக்கியுள்ளர் Ludwig.

albert hitchcockன் பாம் தியரியை நிஜத்தில் செயல்படுத்தி திரைக்கதை அமைத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். பொதுவாக Christopher Nolan இன் திரைக்கதைகள் சிக்கலகவும், பல பரிமாணங்களை கொண்டதாக இருக்கும். அதன் வரிசையில் இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல… இப்படத்தின் திரைகதையானது ஆரம்பம் முதல் முடிவு வரை Countdown இல் உள்ள வெடிகுண்டு போலவே, எப்போ வெடிக்கும் எப்போ வெடிக்கும் என்றே, அடுத்து என்ன அடுத்து என்ன என்றே நகர்ந்து செல்கின்றது. அங்கங்கே படம் சற்று வேகம் குறைவது மக்களுக்கு தான் சொல்ல வருவது புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே தான் இருந்தது.

எப்போதும் அரசியலை சைலன்ட் ஆக கையாளும் Christopher Nolan, இப்படத்தில் அதிரடியாக அரசியல் பேசியிருப்பது பெரும் ஆச்சரியமான ஒன்று. இரண்டாம் உலக போரில் அமெரிக்காவின் வெறிசெயல்களும், அமெரிக்கா-ரஷ்யா இடையேயான பனிப்போருக்கு தொடக்கமாக இருந்த விஷயங்கள் என படத்தில் பெரும் பகுதி அரசியலை அழுத்தமாக பதிவிட்டுள்ளார் Christopher Nolan. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து கொண்டே அமெரிக்காவின் வரலாற்றை விமர்சிப்பது பெரும் சாவல் தான்.

மேலும், Prestige படத்தில் Nikola Tesla-வை திரையில் கண்முன் கொண்டு வந்த Christopher Nolan, Oppenheimer மூலம் Einstein-ஐ உயிர்த்தெழ செய்துள்ளார் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் ஒரு Biopic ஆக இந்த படம், வரலாற்றை மறுமுறை சென்று பார்க்க வழி வகுத்தது மட்டும் இல்லாமல், ஒரு தனிமனிதனின் உளவியல் சிக்கல்களும், ஒரு படைப்பாளியின் படைப்பும், அர்ப்பணிப்பும் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கும் என்பதையே இப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading