நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘அமரன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் திரைப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 21-வது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK21 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘அமரன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பெண் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சொமேட்டோ சிஇஓ!
இந்த திரைப்படத்தில் ” மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது 32-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் சாய் பல்லவி. அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சாய் பல்லவி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘அமரன்’ திரைப்படக்குழு அவரை வாழ்த்தும் விதமாக ஒரு சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Your grace on screen and off has won countless hearts, and your Charisma continues to Inspire!
Wishing Sensational Talent @Sai_Pallavi92 on her Birthday#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #AMARAN #HBDSaiPallavi@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP… pic.twitter.com/Fg7GXA1XHZ— Raaj Kamal Films International (@RKFI) May 9, 2024