முக்கியச் செய்திகள் விளையாட்டு

8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ஐக்கிய அரபு அமீரத்தில் துபாய் சர்வதேச மைதானத்தில் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்துடன் இந்தியா மோதியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களை எடுத்திருந்தது. அதிகப்பட்சமாக மைக்கேல் லீஸ்க் 21 ரன்களை எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 80 ரன்களை குவித்தது. இதில் ராகுல் 19 பந்துகளில் 6 பவுண்ட்ரிகள், 3 சிக்ஸர்கள் என 50 ரன்களை குவித்தார்.

இவர்களையடுத்து களமிறங்கிய கோலி, சூர்ய குமார் ஜோடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். இதன் காரணமாக இந்திய அணி எளிதாக வெற்றிப் பெற்றது.

இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது இரண்டாவது வெற்றியாகும். மொத்தமாக இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இந்திய அணி இரண்டு தோல்வி, இரண்டு வெற்றி என சமநிலையில் உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Jeba Arul Robinson

திருவொற்றியூரை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் – சீமான்

Gayathri Venkatesan

புரெவி புயல் பாதிப்பு ஆய்வு: இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

Saravana