36 C
Chennai
June 17, 2024
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் தொழில்நுட்பம் செய்திகள்

AI-யும் DJ-யும் சேர்ந்தா மாஸ்…! – இசை ரசிகர்களுக்கு புதிய விருந்து


ச.அகமது

கட்டுரையாளர்

பிரபலமாக அறியப்பட்டு வரும் Dj  இசையில் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள புதிய வகை அறிமுகத்தை பற்றி தெரிந்த் கொள்வோம் வாருங்கள்.

ChatGpt திடீரென ஏற்படுத்திய தாக்கத்தால் எல்லா தொழில் நுட்ப தளங்களுமே அவசர அவசரமாக தாங்களும் AI யுகத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ள தினந்தோரும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கூகுள், மெட்டா, ஸ்னாப்சாட் , மைக்ரோசாஃப்ட் என சமூக ஊடக தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் நாங்களும் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அறிவிப்பு வெளியிட்டதை பார்த்தோம். அதன்படி கூகுள் நிறுவனம் பாட் எனும் செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகம் செய்கிறது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங்க் நிறுவனமும் Tay எனும் செயற்கை நுண்ணறிவு சார்ட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது.

இதனையும் படியுங்கள்: வாட்சப்பில் தவறுதலாக அனுப்பிய பதிவுகளை எடிட் செய்யலாமா.? – எப்புட்ரா..?

இந்த செயற்கை நுண்ணறிவு செயலிகள் வெறுமனே சமூக ஊடகங்கள் மட்டுமல்லாது நமது அன்றாட தேவைகள், உரையாடல்கள், குரல் பதிவுகள் போன்ற செயலிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மியூசிக் ஸ்டீரிமிங் தளத்தில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஸ்பாட்டிஃபை நிறுவனம் தங்களது இசைத் தளத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஸ்பாட்டிஃபையில் AI யும் DJ யும் சேர்ந்தா மாஸ்..!

ஸ்பாட்டிஃபை செயலி இசை ரசிகர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மியூசிக் ஸ்டீரிமிங்க செயலியாகும். கிட்டத்தட்ட உலகம் முழுக்க 489 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை ஸ்பாட்டிஃபை கொண்டுள்ளது. மேலும் ஸ்பாட்டிஃபை செயலில் பணம் செலுத்தி சந்தாதாரர்களாக சேர்ந்து ப்ரீமியம் சலுகையை அனுபவிப்போரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 205மில்லியனாகும்.

இதனையும் படியுங்கள் : தேவையற்ற போன் அழைப்புகள் – தீர்க்க வழி என்ன.?

சமீபத்தில் ஸ்பாட்டிஃபை நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி DJ வடிவிலான புதிய அறிமுகத்தை வெளியிட்டது. அதன்படி ஸ்பாட்டிஃபை செயலில் இனி DJ பட்டன் இடம்பெறும்.

DJ ன்னா..? – DJ தெரியாதா..?

DJ என்பது ஒரு வகையான இசையின் புதிய வடிவம். புதிய அல்லது பழைய பாடல்கள், சினிமாவில் இடம்பெறும் வசனங்கள், நகைச்சுவை மற்றும் துள்ளலான இசை ஆகியற்றை ஒன்றினைத்து இசை ரசிகர்களின் துள்ளலுக்கு ஏற்ப மியூசிக்கை ஏற்றி இறக்கி கொண்டாட்டத்தில் மிதக்க வைப்பதே DJ.

ஆரம்பத்தில் நட்சத்திர விடுதிகள், மதுபான விடுதிகள், கேளிக்கை நடனங்கள் இடம்பெறும் டிஸ்கோ கிளப்கள் ஆகியவற்றில் தான் DJ அறிமுகமானது. பின்னாளில் அந்த இசை பரவலாக்கப்பட்டு தற்போது பெருநகரங்களில் நடைபெறும் ஐடி நிறுவனங்களின் get together முதல் ஐதீகமாக நடைபெறும் திருமணங்கள் வரை DJ வந்துவிட்டன. சினிமாவில் கூட தற்போது DJ பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தவிர DJ எனப்படும் இசையை ப்ளே செய்யும் டிஸ்க் ஜாக்கிகளுக்கு தற்போது பெரும் கிராக்கி உள்ளது.

இதனை புரிந்து கொண்ட மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை புதிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்டபத்தை DJ வில் பயன்படுத்தி புதிய அறிமுகத்தை வெளியிட்டுள்ளது.

Spotify-ல் DJ எப்படி செயல்படும்..?

ஸ்பாட்டிஃபை செயலின் புதிய அப்டேட்டட் வெர்சனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு உள் நுழைந்து அதில் கேட்கப்படும் மேலதிக விபரங்களை நிரப்ப வேண்டும். ஸ்பாட்டிஃபை செயலில் உள்ளே நுழைந்தவுடன் அதன் முகப்பு பக்கத்திற்கு சென்று உங்களுக்கு பிடித்த மியூசிக் ட்ராக்குகளை செலக்ட் செய்து அதன்பின்னர் DJ கார்ட் எனும் புதிய வசதியை அழுத்தினால் DJ வடிவில் பாடல் ஒலிக்க துவங்கும்.

AI தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வகை DJ வசதி உங்களுக்கு பிடித்த பாடல்களை, பழைய பாடல்கள், பிரபலமான சினிமா வசனங்கள் ஆகியவற்றின் கலவையாக செய்து துள்ளல் இசையுடன் வழங்கும். அப்படி பாடல் ஒலிக்கும் போது DJ மியூசிக்கில் ஒலிக்கப்படும் பின்னணி குரலைப்போன்றே அடுத்து என்ன பாடல் உள்ளிட்ட விபரங்களை குரல் வடிவில் உங்களிடம் சொல்லும். மேலும் பயனாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நம்முடைய விருப்பங்களை மதிப்பாய்வு செய்து அதற்கேற்றவாறு பாடல் ஒலிக்கும் வகையில் இந்த DJ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனையும் படியுங்கள்: ChatGPT பயனர்கள் ஜாக்கிரதை; போலி ChatGPT செயலி உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடலாம் – வல்லுநர்கள் எச்சரிக்கை

புதிய வகை ஸ்பாட்டிஃபை DJ வசதி சோதனை ஓட்டமாக அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் மட்டுமே பிரீமியம் சந்தாதாரர்களுக்கு ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மற்ற நாடுகளுக்கும் இந்த சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஸ்பாட்டிஃபை நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது.

ச.அகமது, நியூஸ்7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading