தமிழகம்

புரெவி புயல் பாதிப்புக்கு 1,514 கோடி ரூபாய் நிவாரணம் தேவை! -மேலாண்மைத்துறை ஆணையர்

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ஆயிரத்து 514 கோடியே 6 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவுள்ளது.

இது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் பணீந்தர ரெட்டி வெளியிட்ட தகவலில், தற்காலிக நிவாரணமாக 484 கோடியே 97 லட்சம் ரூபாய் தேவை என குறிப்பிட்டுள்ளார். மேலும், நிரந்தர நிவாரணமாக 1,029 கோடியே 90 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வரும் 28-ம் தேதி தமிழகம் வரும் மத்தியக் குழுவிடம், இதற்கான நிதி உதவியைக் கோர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேத விவரங்களை மத்திய குழு வரும் 28 மற்றும் 29ஜ-ந் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

பெரியார் சிலைக்கு தீ வைத்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் போராட்டம்!

Gayathri Venkatesan

தடுப்பூசி தயாரிப்புக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு!

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

Gayathri Venkatesan

Leave a Reply