சினிமா

அது என்ன ‘சார்பட்டா பரம்பரை’ ?

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட குழு வெளியிட்டுள்ளது.

அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். காலாவிற்கு பிறகு ரஞ்சித், தற்போது ஆர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார் ஆர்யா.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சார்பட்டா பரம்பரை படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு சார்பட்டா பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸட் லுக் போஸ்டரில் ஆர்யா பாக்சிங் ரிங்கிற்குள் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள், ஆர்யா ,ரஞ்சத் இருவரையும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். ஆர்யாவிற்கு ,சூர்யா ,மாதவன் உள்ளிட்ட ஹீரோக்கள் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் .

‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் பா.இரஞ்சித் ,”இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம். எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா ” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யாவின் பெயர் படத்தில் கபிலா என்பதை அறிய முடிகிறது. ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சிவகார்த்திக்கேயன் நடித்த மான்கராத்தே , தனுஷ் நடித்த பட்டாஸ் போன்ற படங்கள் குத்துச்சண்டை, பாரம்பரிய தற்காப்பு கலைகள் உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது . அது என்ன ? சார்பட்டா பரம்பரை என்றால் இடியப்ப நாயக்கர் பரம்பரை, சதுர்சூரிய சார்பட்டா பரம்பரை ,எல்லப்ப செட்டியார் பரம்பரை இப்படி குத்துசண்டை குழுக்களுக்கு வடசென்னையில் பெயர் வைத்து ஒரு காலத்தில் பெரிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வந்தது தான் சார்பட்டா பரம்பரை .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

படப்பிடிப்பே துவங்காத நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் செய்த சாதனை

EZHILARASAN D

இசையமைப்பாளர் DSP-ன் ஆல்பத்தில் பஜனை பாடல்? – போலீசில் புகார்

EZHILARASAN D

போயஸ் கார்டனில் வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

Halley Karthik

Leave a Reply