27.2 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

Suriya44 – காரத்திக் சுப்புராஜ் கொடுத்த மாஸ் அப்டேட்!

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும், தயாரிப்பாளருமாக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர், ஆடியோ லான்ச், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவாவிற்கு பின் சூர்யாவின் அடுத்த படம் சுதா கொங்கரா அல்லது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் நடிகர் சூர்யா வேறு சில படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading