இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள், ஒரு சிறுவன் மீட்பு!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த 14…

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இன்ஸ்டாகிராம் காதலரை தேடி வீட்டை விட்டு வெளியேறிய மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரை போலீசார் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டா மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.  தற்போது பள்ளி
விடுமுறை என்பதால் கோடை கால பயிற்சி பயில அந்த சிறுமி, அவரது சகோதரர் மற்றும் அருகில் வசிக்கும் இரண்டு சிறுமிகளுடன் அருகில் உள்ள கம்யூட்டர் சென்டருக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில்,  சிறுவன் உட்பட நாள்வரும் நேற்று வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.  அவர்கள் 4 பேரும் கம்யூட்டர் சென்டருக்கு செல்லாமல் தேங்காய்பட்டணம் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.   அங்கிருந்தபடி அந்த சிறுமி தனது இன்ஸ்டா காதலனை அழைத்துள்ளார்.  அங்கு வந்த வாலிபர்,  அந்த சிறுமியை காதலிக்கவில்லை என்று கூறி அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி, காதலன் தன்னை ஏமாற்றியதை  எண்ணி வருத்தத்துடன் தனது சகோதரர் மற்றும் தோழிகளை அழைத்துக்கொண்டு
மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று, அங்கிருந்து ரயிலில் ஏறி திருவனந்தபுரம்
சென்றுள்ளனர்.   அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைத்த படி
நின்றிருந்த சிறுவர் மற்றும் சிறுமிகளை கேரள ரயில்வே போலீசார் மீட்டு
அவர்களிடம் விசாரணை நடத்தி புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற சிறுமிகள் வீடு திரும்பாததால்
அவர்களது பெற்றோர் புதுக்கடை போலீசில் புகார் அளித்திருந்தனர்.
தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்ட சிறுமிகள் மற்றும் சிறுவன் புதுக்கடை
காவல்நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.  போலீசார் அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.