முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

777 சார்லி படத்தை பாராட்டி நெகிழ்ந்த சூப்பர் ஸ்டார்

கன்னட சினிமாவின் இயக்குநரான கிரண்ராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவான படம் ‘777 சார்லி’. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த 10ம் தேதி வெளியானது. நாய்க்கும் கதாநாயகனுக்கும் இடையே நடைபெறும் அப்பழுக்கற்ற பாசப்பிணைப்புதான் இப்படத்தின் கதைக்கரு. வெளியான முதலே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வரும் இப்படம் கன்னட சினிமாவின் புதியதொரு மைக்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு கே.ஜி.எஃப் எனும் ஆக்‌ஷன் மசாலா மூலம் இந்தியாவையே திரும்பிப்பார்க்கவைத்த கன்னடா சினிமா, இப்படத்தின் மூலமாக மற்றுமொரு பரிணாமத்தில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. 777 சார்லி படத்தை கன்னட முதல்வர் பசரவாஜ் பொம்மை பார்த்ததை தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்கு இப்படத்தின் டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படமாட்டாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை தொலைப்பேசியில் அழைத்து மனமுருகி பாராட்டியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்த படத்தின் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, ‘ என்ன ஒரு அற்புதமான நாள்! ரஜினிகாந்த் சாரிடமிருந்து போன் வந்திருந்தது.நேற்று இரவு சார்லி படத்தை பார்த்து பிரமித்து போனதாக தெரிவித்தார். படத்தின் தரத்தை பற்றியும் ஆக்கத்தை பற்றியும் குறிப்பாக ஆன்மீக ரீதியான படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் பற்றியும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படியொரு பாராட்டை பெறுவது அற்புதமாக உள்ளது. மிக்க நன்றி ரஜினி சார்’ எனக்குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேரறிவாளன் விடுதலை : அதிகாரப்பகிர்வு – மத்திய அரசோடு முரண்பட்ட உச்சநீதிமன்றம்

Arivazhagan CM

‘gate அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை கைவிட வேண்டும்’

Arivazhagan CM

500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்; விவசாயிகள் வேதனை

Halley Karthik