25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து : முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் சொல்வது என்ன..?

ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் முன்னாள் ரயில்வே அமைச்சர்களான லாலு பிரசாத், மம்தா பானர்ஜி ஆகியோர் இது குறித்து என்ன தெரிவித்துள்ளார்கள் என்பதை காணலாம்.

கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று மாலை 3:30  வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலை இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர்களாக இருந்த லாலு பிரசாத் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் அமைச்சர் அஸ்வினி குமார் ஆகியோர் தெரிவித்துக்களை விரிவாக காணலாம்.

லாலு பிரசாத் யாதவ் – ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர்:

“ இந்த ரயில் விபத்திற்கு மிக முக்கிய காரணம் அலட்சியம்தான். விபத்து நடந்த பிறகும் போதுமான நடவடிக்கள் எடுக்கப்பட்டதில் ஏற்பட்ட அலட்சியம்தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த அரசு ரயில்வே முழுவதையும் சீரழித்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி – மேற்கு வங்க முதலமைச்சர், முன்னாள் ரயில்வே அமைச்சர்

“ “ரயில்வே துறை அமைச்சராக 3 ஆண்டுகள் இருந்துள்ளேன்; ரயில்வே துறை என்னுடைய குழந்தை போன்றது; ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் என்னுடைய ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன். ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்க மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும்; மீட்புப் பணிகள் முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.

பவன் குமார் பன்சால் –  முன்னாள் ரயில்வே அமைச்சர் , காங்கிரஸ் கட்சி

” ஒடிசா ரயில் விபத்து ஒரு சோகமான சம்பவம், விபத்தில் இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்; இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என பவன் குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுனா கார்கே – காங்கிரஸ் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர்

”ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்து குறித்து பிரதமர் மோடியிடமும், ரயில்வே அமைச்சகத்திடமும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் உள்ளது. இதற்கு மத்திய அரசு முறையான பதில் அளிக்க வேண்டும். ஆனால் இது அதற்கான நேரம் இல்லை. மீட்பு நடவடிக்களை துரிதப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

9 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பிய பூனை! – அமெரிக்காவில் நெகிழ்ச்சி

Jayasheeba

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

Vandhana

புதிய அமைச்சர்கள் யார் யார்? 34 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு

Halley Karthik