முக்கியச் செய்திகள் இந்தியா

வேளாண் சட்டங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேரள எம்.பி. டி.என்.பிரதாபன் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்கள் மூலம் குறைந்த பட்ச ஆதாரவு விலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடர வேண்டும் என்றும் மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து வழக்கு தொடர்பாக பதிலளிக்க, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கையும் விசாரிப்பதாக கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

அரசியல் பிரவேசம்: ரஜினி கொடுத்த புதிய அப்டேட்

G SaravanaKumar

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது; ப. சிதம்பரம்

G SaravanaKumar

Leave a Reply