மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதன் பிறகு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவமனையை கட்டுவதற்குத் தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை 33 மாதங்களில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 2026 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.







