கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” என் வாழ்வில் மறக்க முடியாத மாவட்டம் சேலம் மாவட்டம் தான். திமுக கொடியேற்றி வைக்க வீரபாண்டி ஆறுமுகத்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆண்டு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஊர்களிலும் திமுக கொடி கம்பங்களை புதுப்பிக்க வேண்டும், திமுக சார்ந்த குடும்பகளின் குழந்தைகளுக்கு படிப்பிற்கு உதவ வேண்டும் அதேபோல நலதிட்டங்களை வழங்க வேண்டும்.
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாணியாக இருக்கின்ற செயல்வீரர்கள் கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. உறுதியாக சேலம் மாவட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். அதற்காகத்தான் அமைச்சர் நேருவை சேலத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். சேலத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய உழைப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது.
கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தை பாழ்படுத்திக் கொண்டிருந்த அதிமுக வை ஆட்சியிலிருந்து இறக்கி விட்டு மக்கள் ந வழங்கி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவின் செயல்பாடுகளால் கட்சி சிறப்பாக உள்ளது. உலகத்திலே திமுக போன்று கட்டமைப்பு கொண்ட கட்சி எங்கும் கிடையாது. எனவே எந்த சக்தியாலும் திமுகவை வீழ்த்த முடியாது.
மாநில வளர்ச்சி, கட்சியின் வளர்ச்சி இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு பணியாற்றி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் அலட்சியமாக செயல்படக்கூடாது நாளுக்கு நாள் பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது. முழுமையாக தேய்ந்து விடும் முன்பாக தேர்தலில் நடத்த பாஜக முயற்சிக்கலாம். அதனால் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தர உள்ளார் கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்துக்கு என்ன செய்தார் என்ற பட்டியலை அவர் வெளியிட தயாரா ? மற்றும் மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி உள்ளனர்.தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை. அமித்ஷா இதற்கு பதில் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தது..?
திமுக நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லாதவர்கள் உடனே கணக்கை துவங்க வேண்டும். திட்டமிட்டு சிலர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றன கழகத்தினரை மகிழ்ச்சியாக நிர்வாகிகள் வைத்துக் கொள்ள வேண்டும். குறைகளை தீர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவர்களுக்கு குறைகளை காது கொடுத்தாவது கேளுங்கள். யார் வந்தாலும் திமுக அஞ்சப்போவது இல்லை. ஸ்டாலினும் அஞ்சப் போவது இல்லை. திமுக தொண்டரைக் கூட அசைக்க முடியாது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை இந்தியாவே பேசும் படி கொண்டாடுங்கள்.
திமுகவை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற சூழ்நிலையை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கி கொண்டிருக்கிறேன். உங்கள் உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும். நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. கட்சி வளர்ச்சி, ஆட்சி பொறுப்பில் இருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். க
அதிமுகவை நம்பி பாஜக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி. தோல்வி மேல் தோல்வி அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.