தேமுதிகவில் விருப்பமனு அளிக்க 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

தேமுதிகவில் விருப்பமனு அளிக்க 3 நாட்கள் அவகாசம் நீடித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற்றுவருகின்றனர்.

தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்து விருப்பமனுக்களை 13.02.2026 முதல் 15.02.2026 மாலை 05.00 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 15.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.