’டக்கர்’ பாப் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ஜாலியாக பார்க்கக்கூடிய 2K கிட்ஸ் படம் – சித்தார்த்

டக்கர் திரைப்படம் பாப் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ஜாலியா பார்க்கக்கூடிய 2K கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்ஷியல் திரைப்படம் என அப்படத்தின் கதாநாயகன் சித்தார்த் தெரிவித்துள்ளார். ’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை…

டக்கர் திரைப்படம் பாப் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ஜாலியா பார்க்கக்கூடிய 2K கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்ஷியல் திரைப்படம் என அப்படத்தின் கதாநாயகன் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்குகிறார். பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். காதல், எமோஷன் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுடனும் இளமை துள்ளலுடனும் பார்வையாளர்களை கவரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளனர்.

சித்தார்த், யோகிபாபு, திவ்யான் ஷா, அபிமன்யு சிங், விக்னேஷ் காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் டக்கரில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.ஏ.கௌதம் (எடிட்டிங்), உதய குமார் கே (கலை இயக்கம்), தினேஷ் காசி (ஸ்டண்ட்ஸ்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று திரையரங்கிற்கு வந்து வெற்றிகரமாக டக்கர் திரைப்படம் ஓடி வருகிறது. இதனை ஒட்டி கோவை ப்ராட்வே திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த சித்தார்த் டக்கர் திரைப்படம் பாப் கார்ன் சாப்பிட்டுக்கொண்டே ஜாலியா பார்க்கக்கூடிய 2K கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்ஷியல் திரைப்படம் எனக்கூறினார். திரையரங்கில் ரசிகர்கள் கரகோஷத்துடன்,சிரிப்புடன் படத்தை ரசித்து பார்க்கின்றனர் எனவும் காதல்படங்களில் இது ஒரு வித்தியாசமான காதல் படம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.