மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, மீண்டும் செங்கல்லை எடுத்துக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி வலம் வரப்போகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி திருமண நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”நாடாளுமன்றத்தில் டி ஆர் பாலு கேட்ட கேள்விக்கும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை, தங்கை கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கும் விடையில்லை. தம்பி தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி பேட்டி அளித்தார். எதிர்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட உள்ளே இல்லை என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் என்ன நாடகம் அரங்கேறி வருகிறது என்று தெரியவில்லை.
அண்மை செய்தி –
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை என்ன ஆனது என தெரியவில்லை. மதுரையிலிருந்து செங்கலை எடுத்து வந்து தமிழ்நாடு முழுவதும் தம்பி உதயநிதி கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்து வந்தார். அதற்கு பிறகு கூட வெட்கம் வரவேண்டாமா? வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக இரண்டாவது முறையும் தம்பி உதயநிதி செங்கல்லை எடுத்துக்கொண்டு வலம் வரப்போகிறார்.
பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு பொது மக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை 15,000 ரூபாய் அல்லது ஒரு 15 ரூபாய் கூட வங்கி கணக்கில் செலுத்தவில்லை
இப்படிப்பட்ட ஆட்சிதான் மத்தியில் நடக்கிறது. 2021 ல் எப்படி தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டதோ அதேபோல 2024ல் இந்தியாவிற்கு விடியல் ஏற்படுத்த வேண்டும். அந்த நிலை வரப்போகிறது. அதற்கு தயாராக இருங்கள் ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
– யாழன்