”தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” – அமித்ஷா பேச்சு….!

தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

புதுகோட்டை மாவட்டம் பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

தொன்மையான தமிழ் மொழியில் பேசாசததற்கு மன்னித்து விடுங்கள். புதுகோட்டை மாவட்டம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் பூமி.
தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, குடும்ப ஆட்சியான, திமுகவை அகற்றுவோம். மகன் உதயநிதியை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் நோக்கம்.
தமிழ் நாட்டில் அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராட கூடிய அளவுக்கு ஆட்சி மோசமாக உள்ளது.
வரும் ஏப்ரலில் தமிழ் நாட்டில்  மோடியின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டுமா…?  2026ல் தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.