தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளனர் – மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவு….!

திமுக அரசின் ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் தமிழ் நாட்டு மக்கள் சலிப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு இன்று வருகை தந்தார். அவரை தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.

இன்று மாலை அவர் திருச்சி சாலையில் உள்ள பாலன் நகா் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ”தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்றவுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.