“புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்கை கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது.  முன்னாள் அமைச்சரும்,  திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பெஞ்சமின் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பின்னர் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கிராமிய நடனங்கள்,  பூரண கும்பம் மரியாதை  அளிக்கப்பட்டது.  அதோடு நாடாளுமன்ற கட்டடம் போன்ற நுழைவாயிலும் பல்வேறு கட்டவுட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. அறுசுவை உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கூடிய அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் குறிப்பாக

  • மிக்ஜாம் புயல் வெள்ளத்தை முறையாக கையாளாத திமுக அரசுக்கு கண்டனம்
  • 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்
  • எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்
  • மக்களவையில் கடந்த டிச.12ம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
  • புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றி மறுவாழ்வு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும்

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.