R.S.துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணா புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஷாம், ஆண்ட்ரியா, அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் தொடங்கி ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நிறைவுற்றது. மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்கிறார்.
தொடர்ந்து இப்படத்திற்கு லீடர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது.







