மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தால் 260 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர். இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினார்.
இதையடுத்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சுமார் ஓராண்டுக்குப் பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது.
இதனை தொடர்ந்து மணிப்பூர் மாநில முதலமைச்சர் ஆக மாநில பாஜக சட்டமன்றக்குழு தலைவர் கேம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார். மாநில தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்ற நிகழ்வில் கேம்சந்த் சிங்கிற்கு ஆளுநர் அஜய் பல்லா பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.







