தமிழகம் செய்திகள் சினிமா

லைட் மேன் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சி; திரளாக பங்கேற்ற ரசிகர்கள்

திரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பாடகர்கள் மற்றும் திரளான
ரசிகர்கள் பங்கேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி கண்டு
ரசித்தனர்.

சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் திரைத்துறையில் பணிபுரியும் லைட் மேன் தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘விங்ஸ் ஆப் லவ்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது .

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இசை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் பாடகர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி ,பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ,இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ,கிருத்திகா உதயநிதி, பாடகர்கள் சிவாங்கி, பென்னி தயால், தயாரிப்பாளர்கள் கே ராஜன் ,பிரமிட் நடராஜன் ,மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் அனுமதி நுழைவு கட்டணமாக 1000ரூ முதல் 25,000ரூ வரை
வசூலிக்கப்பட்டது .அனுமதி சீட்டிற்கு ஏற்றார்போல் இரண்டு வகுப்புகள் கொண்ட
மூன்று நுழைவு வாயில்கள் மூலமாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

 

மேலும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை
அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அதேபோல் நிகழ்ச்சிக்கு சிறிது நேரம்
கால தாமதமாக வந்தவர்களை நுழைவு வாயிலில் அனுமதிக்காததால் திரும்பி செல்ல
சொன்னதால் ரசிகர்கள் சிலர் ஏமாற்றத்துடன் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவிற்கு முதலிடம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Editor

மேட்டூர் அணையிலிருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றம்!

Arivazhagan Chinnasamy

’மதுரையில் கலைஞர் நூலகம் – அறிவுத்தாகம் தீர்க்கும் முதலீடு’: சு.வெங்டேசன் எம்.பி புகழாரம்!

Halley Karthik