சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் கருணாநிதி கேலரி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில்  புதிதாக கட்டப்பட்ட   கேலரிகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1916 ம் ஆண்டு கட்டப்பட்ட சேப்பாக்கம்…

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில்  புதிதாக கட்டப்பட்ட   கேலரிகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1916 ம் ஆண்டு கட்டப்பட்ட சேப்பாக்கம் மைதானம் இந்தியாவின் இரண்டாவது பழமையான மைதானமாக திகழ்கிறது. 1934 ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்ல் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இம்மைதனத்தில் மோதின. அதுபோல டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிற்கு முதல் வெற்றி கிடைத்த மைதானம் சேப்பாக் மைதானம்தான்.

சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேப்பாக்கம் மைதானத்தில் அமைந்துள்ள கேலரிக்கு முதல் முறையாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 31140 இருக்கைகளுடன் புதிதாக 5306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36446 இருக்கைகளுடன் சேப்பாக்கம் புதுப் பொலிவுடன் காட்சி தருகிறது.

இதனையும் படியுங்கள்: புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்: முதலமைச்சர் ரங்கசாமி

மேலும் 655 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடமும், 655 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது புதிதாக திறக்கப்பட்ட பிறகு வரும் 22ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

புதிதாக புனரமைக்கப்பட்ட மைதானம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட  கேலரியை திறந்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீகாந்த், இந்தியா சிமெண்ட் நிறுவன தலைவர் சீனிவாசன், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா துணை மேயர் மகேஷ்குமார் , தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனையும் படியுங்கள்: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி கேலரி ஏன்?- ஒரு பார்வை

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்பட்ட கேலரியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் . சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரிக்கு “கலைஞர் எம்.கருணாநிதி ஸ்டாண்ட் ”  என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் எம்.கருணாநிதி கேலரியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியா சிமெண்ட் நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

– யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.