”நா பீட்டர் பார்க்கர் மட்டும் இல்ல” – வெளியானது ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே பட டிரெய்லர்……!

டாம் ஹோலண்ட் நடிப்பில் ருவாகியுள்ள ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மார்வல் திரைப்படங்களில் மிகவும் பிரபலமானது ஸ்பைடர் மேன். சிலந்தி கடியால் சூப்பர் பவர்பெற்று மக்களை காப்பாற்றும் பீட்டர் பார்க்கர் எனும் இளைஞன் பற்றிய கதைதான் இது.

சாம் ரெய்மி இயக்கத்தில் டோபி மாகுவேர் நடிப்பில் கடந்த 2002 முதல் 2007 வரை வெளியான ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. இதையடுத்து 2012 முதல் 2014 வரை வெளியான ஆண்ட்ரூ கார்பீல்ட் நடிப்பில் வெளியான தி அமேசிங் ஸ்பைடர் மேன் படங்களும் நல்லவரவேற்பை பெற்றன.

இதனை தொடர்ந்து மார்வல் சினிமாட்டிக் யூனிவர்சில் கொண்டுவரப்பட்ட ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை கொண்டு டாம் ஹாலண்ட் ந்டைப்பில் மூன்று படங்கல் வெளியாகின. இந்த படங்களும் பாக்ஸ் ஆபீசில் சக்கை போடு போட்டட்தை தொடர்ந்து ஸ்பைடர் மேன் திரைப்பாகத்தின் நான்காம் பாகம் உருவாகியுள்ளது.

டாம் ஹோலண்ட் நடித்துள்ள இப்படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ஜெண்டயா, ஜான் பெர்ந்தால்,மார்க் ருஃபாலோ, சேடி சின்க் மற்றும் ஜேக்கப் படலோன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.

‘நோ வே ஹோம்’ நிகழ்வுகளுக்குப் பிறகு, பீட்டர் பார்க்கரை பற்றி உலகம் அவரை மறந்துவிட்ட நிலையில், அவர் நியூயார்க்கில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதை இந்த டிரெய்லர் காட்டுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.