புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்: முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே பட்ஜெட் உரையில் பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உள்ளிட்ட…

புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பட்ஜெட் உரையில் பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது, அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Ind vs Aus முதல் ஒருநாள் போட்டியை நேரில் ரசிக்கும் ரஜினிகாந்த்

தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து அனைத்து இத்திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

மேலும், புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.