நடிகர் விஜய் தவெக என்னும் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் தலைப்பாகை அணிந்து பந்தியில் தரையில் அமர்ந்து நோன்பு உணவு சாப்பிட்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் புஸ்சி ஆனந்த்,செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.








