முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள் உறுதிமொழியேற்பு!

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை, நியூஸ் 7 தமிழ், தமிழ்நாடு முழுவதும் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை செங்குன்றம் R.B.கோதிஜெயின் மகளிர் கல்லூரியில் மாதவிடாய் விடுமுறைக்கு அரசை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை செங்குன்றம் R.B.கோதிஜெயின் மகளிர் கல்லூரியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகாலட்சுமி, துணை முதல்வர் கீதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், செங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் வேலு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன், சமூக ஆர்வலர் அன்சர் பாத்திமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதுப்பாளையம் இதயா மகளிர் மகளிர் கல்லூரியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் சாராஜாஸ்மின், பேராசிரியைகள், 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகரென கொள் நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்க அரசை வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திலும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கையொப்பம் இட்டனர். பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து உள்ள நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றி பெற, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மோகன்ராம் வாழ்த்து தெரிவித்தார். மாதவிடாய் காலத்தில் அரசு விடுமுறை அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை, அந்தனூர் கிருஷ்ணா காலேஜ் ஆஃப் பார்மசி கல்லூரியில் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் செயலாளர் அறவாழி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்று கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் இதயா மகளிர் கல்லூரியில் மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வலியுறுத்தும் நியூஸ்7 தமிழின் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். அப்போது சமூக அக்கறையுடன் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நியூஸ் 7 தமிழின் நற்செயல்களுக்கு பராட்டு தெரிவிக்கப்பட்டது

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இளங்கோவன், துணை முதல்வர் ஸ்ரீதேவி, பேராசிரியர் விசாலாட்சி உள்ளிட்டோர் பங்கேற்ற இதில் நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலர் கீர்த்தலா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாலின சமத்துவத்தின் இன்றியமையாமை குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைத்தார். இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன்பின்னர் மாதவிடாய் காலத்துக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல் ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும்பர்வீன் பானு ஆகியோர் முன்னிலையில் நியூஸ் 7 தமிழின் ‘நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது’ இதில் கல்லூரி முதல்வர் முனியன், பாலின சமத்துவ உறுதிமொழியை வாசிக்க, அதனை மாணவர்கள் ஏற்றனர்.இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் விடுமுறை விழிப்புணரவு இயக்கத்துக்கும் மாணவ, மாணவியர்கள் முழு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர். அப்போது பேசிய கல்லூரி முதல்வர் முனியன், பாலின சமத்துவத்துக்காக நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள விழிப்புணர்வு இயக்கம் மகத்தானது என்று பாராட்டினார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் நடுநிலைப் பள்ளியில், நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்துள்ள நிகரென கொள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மைதிலி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்தனர்.அதைத்தொடர்ந்து, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வலியுறுத்தும் இயக்கத்தில், மாணவர்கள், ஆசிரியர்கள் கையெழுத்திட்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊசிக்கான ஒத்திகை 5 மாவட்டங்களில் இன்று தொடங்கியது!

Nandhakumar

மாண்டஸ் புயல்; எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

G SaravanaKumar

“நீட் தேர்வுக்கு என்றும் அதிமுக எதிராக இருக்கும்” -ஓ.பி.எஸ்

Halley Karthik