ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமனம்…….!

ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 அவது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சூழலில் காயம் காரணமாக ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் சீசனின் முதல் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஐதராபாத அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக அபிஷேக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அணி நிர்வாகம அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.