31.1 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

‘சூது கவ்வும் 2’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஆர்ஜூன் இயக்கத்தில் நடிகர் மிர்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. இப்படத்தில் பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்று தலைப்பிடப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தில் நடிகர் மிர்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் அர்ஜூன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜாலியான கேங்க்ஸ்டர் ஜேனரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘வீ ஆர் தி நாட் சேம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading