தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலைத் தொடங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் ” நடப்பு அறுவடைப் பருவத்தில், பருத்தியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் பருத்தி விவசாயிகள் மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள், குவிண்டால் ஒன்றுக்கு 12,ஆயிரம் ரூபாய் என்ற வீதத்தில் பருத்தியை விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்டடினர். ஆனால் தற்போது பருத்தியின் விலை குவிண்டால் ஒன்றுக்கு 5.500 ரூபாய் எனக் கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக நடுத்தர இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 6ஆயிரத்து 620ரூபாய் எனவும், நீண்ட இழை பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 7ஆயிரத்து 20 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்துள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் நஞ்சைத் தரிசுப் பருத்தி அறுவடை நடைபெறுவதால், பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிட வேண்டுமென்றும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை இனி ஜூன் 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.







