தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் :  இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் அணி..!!

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் முதல் தகுதி சுற்றில்  திண்டுக்கல் டிராகனை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்…

தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் முதல் தகுதி சுற்றில்  திண்டுக்கல் டிராகனை 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கு இடையேயான ஆட்டம்  சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்தது வீச முடிவு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய கோவை  அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கோவை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தனர்.  சச்சின் 46 பந்துகளில் 70 ரன்களும், முகேஷ் 27 பந்தில் 44 ரன்களும், சுரேஷ் குமார் 26 ரன்களும் குவித்தனர்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களம் இறங்கியது.  ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிக பட்சமாக சரத்குமார் 26 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார்.

பூபதி 25, பாபா இந்திரஷித் 21 ரன்கள்  சேர்த்தனர்-  இதையடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன் அணி கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.