தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் ந்டிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் , ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
Sambavam pandravana kelvipatrupa..
Athula record veikiravana kelvipatrukia?Adhan Thalapathy 🧨
Tamil ▶️ https://t.co/L01w8OaHLq
Telugu ▶️ https://t.co/RfdIWprmUu
Hindi ▶️ https://t.co/nkrUMfIzBx#JanaNayaganTrailer #JanNetaTrailer #JanaNayakuduTrailer#JanaNayaganFromJan9… pic.twitter.com/OJGVFZiW5g
— KVN Productions (@KvnProductions) January 3, 2026







