நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பிரேமலூ புகழ் மமிதா பைஜூ, பாபி தியோல், கெளதம் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
முன்னரே அறிவிக்கப்பட்ட படி இன்று மாலை 6 : 45 மணிக்கு இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கும் டிரெய்லரானது 10 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள அரசியல் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. அவற்றில் சில
”மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க’,
‘மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க’, ‘திரும்பி போகிற ஐடியாவே இல்ல!’
“உன்னை காலி பண்ணிருவேன், அசிங்கப்படுத்திருவேன்னு சொல்ற எவனா இருந்தாலும்் சரி… திரும்பிபோற ஐடியாவே இல்ல… I AM COMING…”
”மக்களுக்கு நல்லது பண்ணறதுக்கு அரசியலுக்கு வாங்கடானா.. கொள்ளை அடிக்கவும், கொலை பண்ணறதுக்குமாடா அரசியலுக்கு வரீங்க…!”
அது மட்டுமின்றி விஜயின் ‘ஜனநாயகன்’ படத்தில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் (முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி) சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.








