முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பு ஏன்? ரத்தாகுமா நீட் தேர்வு…? – எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்


ஜோ மகேஸ்வரன்

கட்டுரையாளர்

அரியலூர் அரசு மருத்துவமனை அரங்கிற்கு அனிதா பெயர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதத்திற்கு குடியரசுத் தலைவரின் பதில், ரத்தாகும் வரை சட்டப்போராட்டம் நடத்துவோம் என்கிற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…என மீண்டும் நீட் தேர்வு ரத்து பேசு பொருளாகியுள்ளது. நீட் தேர்வு தொடக்கம் முதல் தற்போது வரை சுருக்கமாக தற்போது பார்க்கலாம்..

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனும் தகுதித் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் கடந்த 2017-ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கும் 1,176 மதிப்பெண் பெற்றும், உச்சநீதி மன்றம் வரை சென்றும் மருத்துவ கனவு பறிபோனதால், அரியலூர் அனிதா உயிரை மாய்த்துக் கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு காரணமாக கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும், அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாஜக தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. குறிப்பாக 2010ம் ஆண்டு நீட் தேர்வை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்வை ரத்து செய்யக் கோருகிறது. இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் மசோதா

தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நீட் விலக்கு பெறும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து, மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெற்றும் வருகின்றனர்,

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என 86,342 பேரிடன் கருத்துக்களைப் பெற்றனர். விரிவான பரிந்துரைகளை 2021ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி அரசுக்கு அளித்தது.

இதில், எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது. எனவே, 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 2022 செப்.13-ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டிருந்தது.

இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் அனுப்பி வைக்கப்படவில்லை.

இதையடுத்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றனர். முடியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட சட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எம்.பி.க்கள் குழு, நீட் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கோரிக்கையை முன்வைத்தது.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.  ’இந்த மசோதா, மாணவர்களின் நலன் குறிப்பாக, கிராமப்புறத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு ஆளுநர் வந்துள்ளார். எனவே, இந்த மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வானது, ஏழை கிராமப் புற மாணவர்களுக்கு எதிரானதாகவும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும் உள்ளது. நீட் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள், அடிப்படையிலேயே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆளுநரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் ரத்து மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பு ஏன்?

தமிழ்நாடு மட்டும் ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறது? என்கிற கேள்வியும் சிலரால் எழுப்படுகிறது. இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகள் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கல்வி சார்ந்த விவகாரங்களில், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் விழிப்புணர்வு அதிகம். குறிப்பாக, மாணவர் சேர்க்கையில், ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்தியதும் இங்குதான். எனவே நீட் தேர்வின் பாதிப்பை உணர்ந்து எதிர்க்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்கள்.

இந்நிலையில, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி மதுரை எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்திற்கு, பதில் கிடைத்துள்ளது. அதில், ’இந்த மசோதா மத்திய உள்துறையின் மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியில் கட்டப்பட்ட அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த விழாவில் பேசிய விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’’நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை சட்டப் போராட்டம் நடத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அனிதா நினைவு அரங்கை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்‘மருத்துவ அரங்கும் மருத்துவக் கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதைத் தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே’ என்கிறார் சு.வெங்கடேசன். கல்வி உரிமை நிலைநாட்டப்படுமா?

இது குறித்து நியூஸ் 7 தமிழ் சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண…

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் Redmi Note 10T

G SaravanaKumar

இத்தாலியின் முதல் பெண் பிரதமராகிறார் மெலோனி

G SaravanaKumar

டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: ஐசிஎம்ஆர் நிர்வாக இயக்குநர் தகவல்!

Halley Karthik