10 வது டி 20 உலகக்கோப்பை தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் போக்கு காரணமாக உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை ஆகிய தொடர்களில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறி உள்ளது.
உலககோப்பை தொடரிலிருந்து வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டதையடுத்து அந்நாட்டிற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு தங் கள் முடிவை திரும்ப பெற்று இந்த ஆட்டத்தில் களம் இறங்க சம்மதம் தெரிவித்தன. அந்த வகையிலும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறும் இப்போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.







