சாக்லேட்டை கொண்டு சமையல் கலைஞர் ஒருவர் மினி காரை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
அம்ரி குய்ச்சோன் எனும் சமையற்கலைஞர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக பேக்கரி உணவுகளை செய்வதில் வல்லவர். எது செய்தாலும் அதை ஆரம்பத்தில் இருந்தே எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இவரது வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி : டெபாசிட் செய்த தொகையையும் திருப்பித் தரக்கோரி வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
தற்போது சாக்லேட்டை கொண்டு மினி காரை வடிவமைத்துள்ளார். காரின் பாகங்களை சாக்லேட்டில் வரைந்து அதை கட் செய்து காரை அப்படியே வடிவமைத்துள்ளார். பிறகு அதன் மீது வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளார். பார்ப்பதற்கு அப்படியே கார் போன்றே உள்ளது. இந்த வீடியோ தற்போது 56 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
இந்த வீடியோவுக்கு கீழ் ஹூண்டாய் நிறுவனம் கமெண்ட் பதிவிட்டுள்ளது. அந்த கமெண்டில், “இது ஒரு இனிமையான சவாரி” என்று குறிப்பிட்டுள்ளது.