தமிழகம் செய்திகள்

பாலருவி தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு

தண்ணீரின்றி வறண்டதால் பாலருவியானது தற்காலிகமாக மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லையில் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது
பாலருவி. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலாப் பயணிகளை விட , தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். மேலும், கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தளத்தில் , நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளிப்பார்கள்.

இந்நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக , தண்ணீரின்றி பாலருவி வறண்டு காணப்படுகிறது. மேலும், தற்போதைய காலத்தில் பராமரிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பாலருவியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக , கேரளா வனத்துறையினர் அறிவித்துள்ளனர். ஆகவே, இரு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் யாரும் ,
பாலருவிக்கு வர வேண்டாமென கேரள வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

11வது உலக தமிழ் மாநாடு எங்கு, எப்போது நடைபெறும்?

G SaravanaKumar

குழந்தையின் சிகிச்சைக்கு உடனடியாக உதவிய முதலமைச்சர்

G SaravanaKumar

எங்களை பார்த்தால் பயம் என்பதால் இது போன்று செய்கிறார்கள்; வாக்கு சேகரிப்பில் ஏற்பட்ட கைகலப்பு குறித்து சீமான் விளக்கம்

Yuthi