”காலை உணவுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்பு” – வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

”காலை உணவுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்பு ஏற்படுத்தப்படும் என வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் தமிழ்நாடு…

”காலை உணவுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்பு ஏற்படுத்தப்படும் என வளர்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார்.  இந்த குழுவில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்

மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து, திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலை மதிப்பாய்வு செய்யப்படும். மத்திய அரசுத் துறை திட்டங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அடையாளம் கண்டு, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  துறை ரீதியான அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, திருநாவுக்கரசர் எம்பி,  நவாஸ் கனி எம்பி , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..

சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு. கடந்த 2 ஆண்டுகளில் சுய உதவி குழுக்களுக்கு அதிக வங்கி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளோம். 10,000 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை பெரு நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள் வழங்கப்படும்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, சுய உதவிக் குழுக்களின் பங்கேற்பு ஏற்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்க சூழலை ஏற்படுத்த தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நன்றே செய் அதனை இனறே செய் எனும் வகையில், அனைத்து மக்களுக்கும் நலன் தரும் திட்டங்களை சிறிதும் தாமதமின்றி செயல்படுத்த துறைத்தலைவர்களும், தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களும் உறுதி செய்ய வேண்டும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.