முதலாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை அணி…!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட்  அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.  அதன் படி இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி 20  கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  121 மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்மி குணரத்ன 39 ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி சார்பில் நல்லபுரெட்டி சரணி, கிராந்தி கவுட், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டு எடுத்தனர்.

இதை தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.