ஈக்வடாரில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு அரசியல் தலைவா் படுகொலை செய்யப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈக்வடாரில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிபர்…

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வேட்பாளர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு அரசியல் தலைவா் படுகொலை செய்யப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஈக்வடாரில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9ஆம் தேதி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஃபொனாண்டோ விலவைசென்சியோ என்பவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை மர்ம கும்பல் சுட்டுக்கொன்றது.

இந்நிலையில், ஆா்சி கட்சியைச் சேர்ந்த பெட்ரோ பிரோயன்ஸ் என்பவர் 13ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அதே கட்சியை சேர்ந்தவரும், அதிபா் தேர்தலில் முன்னணி வேட்பாளருமான லூயிசா கான்ஸ்லெஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஒரே வாரத்தில் இரு அரசியல் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.