தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’, ‘நானும் ரௌடி தான்’, ’96’, ‘விக்ரம் வேதா’ ஆகிய திரைப்படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தமிழ் மட்டிமின்றி தெலுங்கில் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘உப்பென்னா’ ஆகிய படங்களிலும், இந்தியில் ’ஜவான்’, ’மேரி கிறிஸ்மஸ்’, ’ஃபார்ஸி’(வெப் தொடர்), உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ’தலைவன் தலைவி’ வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அவர் மிஷ்கின் இயக்கியுள்ள “டிரெயின்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கலைப்புலி எஸ். தானு தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘டிரெயின்’ படத்தின் முதல் பாடல் அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.








