ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் துவக்கி வைப்பார் – அமைச்சர் கா. ராமச்சந்திரன்

ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் என  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு தான் சுற்றுலாத்துறையில் சிறந்த…

ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் என  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாடு தான் சுற்றுலாத்துறையில் சிறந்த மாநிலமாக செயல்பட்டு வருகிறது.  இயற்கை சூழலில் அமைந்துள்ள உதகையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உணவு விடுதியுடன் சொகுசு படகுகள் அறிமுகப்படுத்தப்படும் உதகை படகு இல்லத்தில் 5 கோடி மதிப்பீட்டில் சாகச
சுற்றுலா திட்டத்தை எதிர்வரும் மே மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்
சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்க உள்ளார்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான உதகையில் உள்ள படகு இல்லத்தில் இளம்
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு சுற்றுலா திட்டங்களை தமிழ்நாடு
சுற்றுலாத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் உதகை படகு இல்லத்தின் நடுவே ஐந்து கோடி மதிப்பீட்டில் 120 அடி உயரத்தில் தண்ணீர் மீது 450 தூரம் நீளத்தில் கம்பிகள் மூலம் சைக்கிளிங் ( cycling), மங்கி ஜம்பிங் (monkey jumping) போன்ற சாகச விளையாட்டுக்களை  அறிமுகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அரசு உயர்
அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம்
பேட்டி அளித்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன்
தெரிவித்ததாவது..

இந்தியாவில் தமிழ்நாடு தான் சுற்றுலா துறையில் முதல் மாநிலமாக திகழ்கிறது. 2021-22 கடந்தாண்டு உதகைக்கு 12 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்த நிலையில் இந்த 2022-23ம் ஆண்டில் தற்போது வரை 22லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மே மாதத்திற்குள் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை படகு இல்லத்தில் 5 கோடி செலவில் சாகச சுற்றுலா திட்டத்தை எதிர்வரும் மே மாதம் சாகச தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்க உள்ளார்.
இதேபோல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உதகை அருகே உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உணவு விடுதியுடன் கூடிய சொகுசு படகு அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிக உயரமான மலை சிகரமாக திகழும் தொட்டபெட்டா முதல்
வேல்வியூ வரை 360 பேர் சென்று வரும் வகையில் கேபிள் கார் திட்டம் கொண்டு வரும்
பணி தற்போது நடைபெற்று வருகிறது” என அமைச்சர்  கா. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.