தங்கம் விலையானது கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் நேற்று அதிரடியாக உயர்ந்தது. அதன் படி, நேற்று தங்கம் விலையானது கிராமுக்கு ரூ.380-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 40-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.







