டிசி காமிக்சில் சூப்பர் மேனுக்கு இணையான சக்தி கொண்ட கதாப்பாத்திரங்களில் ஒன்று ’சூப்பர் கேர்ள்’. சூப்பர் மேனை போன்று சூப்பர் கேர்ள் கதாபாத்திரத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.
கிரேக் கில்லெஸ்பி இயக்கத்தில் ’சூப்பர் கேர்ள்’ திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தில் ’சூப்பர் கேர்ள்’ கதாபாத்திரத்தில் மில்லி அல்காக் நடித்துள்ளார். மத்தியாஸ் ஷோனார்ட்ஸ், ஈவ் ரிட்லி, டேவிட் க்ரம்ஹோல்ட்ஸ், எமிலி பீச்சம் மற்றும் ஜேசன் மோமோவா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டாம் கிங் எழுதி பில்கிஸ் எவ்லி வரைந்து, 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர்கேர்ள் : வுமன் ஆஃப் டுமாரோ’ என்ற காமிக் தொடரை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
’சூப்பர் கேர்ள்’ திரைப்படம் ஜூன் 26 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஜூனில், பிரபஞ்சத்தில் உங்கள் முத்திரையை பதித்திடுங்கள். ‘சூப்பர்கர்ல்’ திரைப்படத்தின் புதிய தமிழ் ட்ரெய்லர் இதோ. உங்கள் அருகாமையிலுள்ள திரையரங்குகளில் ஜூன் 26, 2026 அன்று வெளியாகிறது. Also in IMAX. In English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/MDjvQPhwzF
— Warner Bros. India (@WarnerBrosIndia) March 31, 2026







