தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பெரும்பான்மையான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ள. ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி சார்பில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.







