ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு : மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மார்ச் 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு…

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மார்ச் 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் வாதிடவுள்ளதால் வழக்கை சற்று நேரத்துக்கு ஒத்திவைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று வழக்கு சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

உளவுத்துறை தகவலின்படி தான் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எனவும் குறிப்பாக உள்ளரங்கில் கூட்டமாக நடத்தும்படி கூறப்பட்டது, இது மாநில சட்டம் ஒழுங்கு தொடர்பானது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளாமல் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.எனவே தான் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோருகிறோம் என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் பேரணியை அனுமதிப்பது என்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம் இதில் முடிவெடுக்கக் கூடிய முழு அதிகாரமும் அரசுக்கு உள்ளது. பேரணியை முழுமையாக தடை விதிக்கவில்லை மாறாக நிலைமையை கவனத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏராளமான பிரச்சினைகள் உள்ள இடங்களில் பேரணி என்பது மறுக்கப்பட்டது இவை அனைத்தும் உரிய முறையில் தான் செய்யப்பட்டது என தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது ஏதோ ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினை கிடையாது ஒட்டு மொத்த மாநிலம் சார்ந்த விவகாரம் ஆகும். பல்வேறு பிரச்சனைகளை ஆராய்ந்து தான் மைதானம் மற்றும் உள்ளரங்கில் பேரணிக்கும், கூட்டத்தையும் நடத்த அரசு அனுமதி அளித்தது. மேலும், உளவுத்துறையின் அத்தனை அறிக்கைகளும் உயர்நீதிமன்றம் முன்பாக கொடுத்திருந்தோம் ஆனால் அதனை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. கோவை வெடிகுண்டு தாக்குதல், பி.எஃப்.ஐ அமைப்புக்கு தடை உள்ளிட்ட  விவகாரங்கள் எல்லாம் அவர்களுக்கு சுட்டிக் காட்டப்பட்டது. ஆனாலும் உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளவில்லை தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்கள் : கொங்கு மண்டலத்தில் மீண்டும் பலத்தை நிரூபித்த திமுக

இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி தரப்பில்  சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்று தமிழ்நாடு அரசு சொல்வதெல்லாம் ஒன்றும் கிடையாது.  உண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. எனவே அந்த அமைப்பினால் எங்களது பேரணியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தானே தவிர எங்களது பேரணியை நிறுத்துவது கிடையாது என வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மார்ச் 5ம் தேதி நடைபெற இருந்த பேரணியை ஒத்திவைப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி எங்கெல்லாம் நடத்த அனுமதி வழங்கலாம் என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த  வழக்கினை  மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.